வெள்ளி, 26 நவம்பர், 2010
சனி, 6 நவம்பர், 2010
வ குவட்டர் கட்டிங்
திங்கள், 23 ஆகஸ்ட், 2010
வம்சம் விமர்சனம்
ஒரே இனம் அதில் தலை கட்டுகள் அவர்களுக்குள் உள்ள பாசம் , நேசம் , வம்ச அபிமானம் , ஆகியவை களை வன்முறை காரம் குறைவாக பாசம் நிறைவாக படை திருக்கிறார் இயக்குனர் அவர்கள், அறிமுக நாயகன் அருள் நிதி மிக்க சிறப்பாக அடக்கி வசித்து இருக்கிறார், இங்கிலீஷ் இல் பெர்பெக்ட் அண்டர் ப்ளே என்பார்களே , அது அழகாக வருகிறது அருளுக்கு , லோ ஆங்கில் build up என மன்னாதி மன்னரு பாடலில் வருவார்
என எதிர் பார்த்தல் அடக்கமாக வந்து புன்னகை கிறார், இதுவே இவர் மேல் நல்ல மதிப்பு வருகிறது . வன்முறை காரத்தை கம்மி பண்ணி நம் வயிற்றில் பால் வார்த்த பாண்டியராஜ் உணர்திகரமான நிமிடங்களில் இன்னும் கொஞ்சம் உப்பை அதாவது பின்னணி இசையை வலுவாக சேர்த்துருக்கலாம் . வம்சம் பசங்க படத்தின் பதிப்பை விடு புது களத்தில் வளர் திருக்கிறது .
செவ்வாய், 20 ஜூலை, 2010
சீமான் அப்படி என தவறாக பேசினார் ?
இப்படிக்கு
சொல்பவன் அல்ல செய்பவன்
வியாழன், 17 ஜூன், 2010
புதன், 16 ஜூன், 2010
ராவணன்
இப்போது ஒருவழியாக ராவணா படத்தின் கதை கசியத் தொடங்கியிருக்கிறது. ராவணா படம் ராமாயணத்தின் தழுவல் என்றெல்லாம் கூறப்பட்டாலும், அதை நேரடியாக அர்த்தம் பண்ணிக் கொள்ள முடியாது. ஏனென்றால் கதை அப்படி வித்தியாசமாக செல்கிறது. கதைப்படி போலீஸ் தேடுகிற குற்றவாளிதான் ஹீரோ விக்ரம். அவருக்கு வைக்கப்படும் குறியில் அவரது தங்கை ப்ரியாமணி போட்டுத் தள்ளப்படுகிறார். அந்த வெறித்தனமான கொலையை அரங்கேற்றியது போலீஸ் அதிகாரி பிருத்விராஜ். இதனால் கோபம் கொள்ளும் விக்ரம், ப்ருத்விராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயை கடத்திக் கொண்டு காட்டுக்குள் பதுங்குகிறார். அவரிடம் இருந்து தப்பித்து, காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்து ஒருவழியாக போலீஸ் கைக்கு கிடைக்காறார் ஐஸ். மனைவி கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட வேண்டிய பிருத்விராஜ், ஐஸ்வர்யாவை சந்தேகப்படுகிறார். அவனும், நீயும் ஒண்ணா காட்டுக்குள்ள சுத்துனீங்க. நீ சுத்தமா இருக்கியான்னு தெரியணும்... என்று கேள்வி கேட்டு டார்ச்சர் செய்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் ஐஸ்வர்யா ராய் எடுக்கும் முடிவுதான் கதையின் க்ளைமாக்ஸ்.
இதில் இராவணன் ஆக விக்ரமும் , ராமன் ஆக பிரிதிவிராஜ் ,மற்றும் சூர்பனகை ஆக ப்ரியாமனியும், மண்டோதரி ஆக ரஞ்சிதாவும் , அனுமாராக கார்த்திக்கும் , விபிஷணன் ஆக பிரபுவும் நடிகிறார்கள்.
வியாழன், 10 ஜூன், 2010
வெள்ளி, 4 ஜூன், 2010
புதன், 2 ஜூன், 2010
இருபது வருடங்களுக்கு பிறகு
விஜய் சில கேள்விகள்
இளைய தளபதி மக்கள் நாயகன் நாளைய முதல்வன் விஜய் அவர்களுக்கு ?
சுறா படம் பார்த்துவிட்டு சூடாய் இருக்கும் ஒரு ரசிகனின் கடிதம்
காதலுக்கு மரியாதையை இல் நடித்த விஜய் எங்கே?
நடிப்பு என்றல் உங்கள் பார்வைல் என்ன?
அது உங்களிடம் இருகிறதா?
எம்.ஜி. யார் சுட்ட பொலிடிக்ஸ் தோசையை நீங்கள் சுடுவது ஏன்?
மகேஷ் பாபு படத்தில் அவர் போட்ட சட்டையை க்குட தங்கள் மாற்ற விரும்பாதது ஏன்?
நீங்கள் நடித்த படத்தை பார்க்கும் பழக்கம் உண்டா?
அபொழுது உங்களுக்கு என தோன்றும் ?
உங்களுக்கு மட்டும் ஏன் இவளவும் எதிர்ப்பு?
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை அதே நேரம் உங்கள் தந்தை இடம் ஒன்றும் பெரிய மந்திரம் இல்லை! உங்களை ஒரே நாளில் சி . எம் ஆக?
அதனால் வெற்றி என்று நங்கள் சொல்ல வேண்டும்?
அதை நீங்கள் சொல்வது நியாயமா?
எபொழுது உங்கள் கலை பயணம் முடியும் ?
எங்களுக்கு எபொழுது விடுதலை தங்களிடம் இருந்து ?
தங்கள் பதிலை எதிர் நோக்கும் உங்கள் நண்பன்
திங்கள், 31 மே, 2010
80 to 90 அக்காலத்தில் தமிழரும்,சினிமாவும், சில மசால்வடைகளும்
அஜயன் பாலா சித்தார்த்
.
80க்கு முன் :
1973ம் ஆண்டில் சென்னையின் ஒரு பகல் பொழுது.அதோ கைவீசி ஒரு இளைஞன் அன்றைய பாண்டிபஜார்வீதியில் நடந்து செல்கிறான். சட்டை பையில் சொற்ப சில்லறை. .வயிற்றில் பசி .கண்களில் தொலைதூர நம்பிக்கை.ஆனால் அவனது தலையிலோ பாரம் கொள்ளாத கனவு. சட்டென எதிர்வருகிறது ராஜகுமாரி திரையரங்கம்.வெறுமையை விரட்டும்விதமாக அந்த இளஞன் அந்த வளாகத்தினுள் நுழைகிறான். ஏதோ ஒருகன்னடப்படம் இயக்குனர் புட்டன்னா கனகல் என எழுதப்படிருக்கிறது.பொழுதைபொக்கவெண்டி அந்த இளைஞனின் கண்கள் முன் வாசலில் வைக்கப்படிருந்த புகைப்பட அட்டைகளின்மேல் படர்ந்து செல்கின்றன. சட்டென அவனது மூளைச்செல்கள் புத்துயிர்ப்பு கொள்கின்றன. தமிழ்ச்சினிமா தன்னுள் புதிய மறுமலர்ச்சியை கண்டுணர்ந்து கொண்ட கணம் அது என்பது அந்த இளைஞனுக்கே கூட அப்போது தெரியாது.அந்த சதுர அட்டைகளில் காட்சிக்கோணங்கள் அவனுக்குள் இதுவரை அனுபவிக்காத புது உணர்வை உண்டாக்குகின்றன.உள்ளுக்குள் ஒரு புதிய இசை, பெயர் தெரியாத இசை,மனசு படபடக்கிறது உடனே டிக்கட்வாங்கிக்கொண்டு இருட்டினுள் நுழைகிறான். நான்குவருடங்கள் கழித்து அவன் வெளியேவந்த போது எண்ணற்ற காமிராக்கள் அவனை மையமிட்டன.அன்று வெறும் சின்னச்சாமியாக இருட்டினுள் நுழைந்த அந்த இளைஞன் இப்பாது பாரதிராஜாவாக வெளிச்சத்தின் முன்னே வந்து நின்றான்.அவன் இயக்கி அந்தவருடம் வெளியான பதினாறுவயதினிலே திரைப்படம்தான் அவனுக்கான அந்த வெளிச்சத்தை உருவாக்கி தந்திருந்தது. திரையுலகம் என்பதோடு நில்லாமல் தமிழக பண்பட்டுதளத்திலும் கூட பல மாறுதல்களை உருவாக்கிய அப்படத்தின் புதிய திரை மொழிக்கும் 70 பதுகளின் துவக்கத்தில் இந்திய சமூக பொருளாதார சூழலில் ஏற்பட்ட மாற்றத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று நான் சொன்னால் அனேகம் பேர் எப்படி என கேள்வியை எழுப்பலாம்.
தொடர் ஐந்தாண்டு திட்டங்களின் வாயிலாக நகரமயமாதல் வேலையில்லா திண்டாட்டம் நடுத்தரகுடும்பங்களின் எண்ணிக்கைபெருக்கம் ஆகியவை காரணமாக இந்தி திரைப்ப்ட உலகில் புது வகை சினிமாக்கள் தோன்றின.¢¢ சினிமாக்கள் என அடையாளமிடப்படும் இத்தகைய திரைப்படங்கள் இதற்குமுன் இருந்துவந்த கலைப்படங்களின் தீவிரத்தன்மையிலிருந்து வாழ்கையை மிகவும் நெருக்கமாக பார்த்து அதன் நுண்மைகளையும் அழகையும் பார்வையாளனோடு பகிர்ந்துகொள்ளும் விதமாக செயல்பட்டன்.ஷப்னா ஆஸ்மி,ஸ்மிதாபட்டீல்,நஸ்ருதீன்ஷா, அமோல் பலேகர் ஓம்புரி போன்ற சாதாரண முகம் கொண்ட மனிதர்கள் நாயகர்களாகவும் நாயகிகளாகவும் உருவெடுத்த்னர்.ஷியாம் பெனகல்,மிருணாள்சென்,கோவந்த் நிகலானி ரிஷிகேஷ்முகர்ஜி,மணிகவுல்,போன்ற இயக்குனர்கள் அக்காலகட்டத்தின் சிற்பிகளாக உருவெடுத்த்னர்.அந்த அலை கன்னடம் மலையாளம் என தெற்கிலும் பரவதுவங்கியது. கன்னடத்தில் கிரீஷ் காசரவள்ளி போன்ற இயக்குனர்கள் தோன்றி இந்த புதிய ரசனைக்கு தங்களது மக்களை த்யார்படுத்திக்கொண்டிருந்த வேளையில்தான் புட்டண்ணா கனகல் எனும் இயக்குனரின் வழியாக அந்த அலை பாரதிராஜாவையும் தொட்டது.
1977ல் பதினாறுவயதினிலே வெளியாவதற்கு முன்பே தேவராஜ் மோகனின் அன்னக்கிளி திரைப்படம் ஓரளவு இந்த அலையின் குணக்கூறுகளை கதைக்களம் திரைக்கதை போன்றவற்றில் காட்சி மொழி மற்றும் நடிகர்தேர்வு ,கதை நகர்த்தப்பட்ட பாங்கு மற்றும் கறுப்பு வௌ¢ளையை முழுவதுமாக ஒழித்துக்கட்டியதில் அத்ன் பஙகளிப்பு ஆகியவை காரணமாக பதினாறுவயதினிலே இந்த பெருமைகளை முழுவதுமாக தன் வஸம் தக்கவைத்துக்கொண்டது.பதினாறுவயதினிலேவை தொடர்ந்து 80க்கு முன் பல திரைப்படங்கள் ஏற்க்குறைய இதேபாணியில் வெளிவரத்துவங்கின. ஆனாலும் திரைப்படக்கல்லூரி மாணவரான ருத்ரய்யா தன் எழுத்தாள நண்பர்களான வண்ணநிலவன்,மற்றும் சோமசுந்தரேஸ்வர் (இயக்குனர்¢ கே¢.ராஜேஸ்வர்)¢¢ ஆகியோருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கிய அவ்ள் அப்படித்தான்.1978,மற்றும் வசனகர்த்தாவாக இருந்து இயக்குனராக அறிமுகமான மகேந்திரன் இயக்கத்தில் வெளியான முள்ளும் மலரும்,1978, உதிரிப்பூக்கள்1979, ஒளிப்பதிவில் அலையை உண்டாக்கி பின் இயக்குனராகவும் வடிவம் கண்ட பாலுமகேந்திராவின் அழியாத் கோலங்கள்1979,துரை இயக்கிய பசி1979,தேவராஜ் மோகனின் ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979,போன்ற திரைப்படங்களும் பாரதிராஜாவின் அடுத்தடுத்த படங்களான கிழக்கே பொகும் ரயில்,1978 நிறம்மாறாத பூக்கள,புதிய வார்ப்புகள்¢¢1979 போன்ற படங்களுமேஇந்த புதிய அலையின் வெற்றி சரடை தொடர்ந்து கையெடுதத்துச் செல்லும்பணியில் ஈடுபட்டன..மேற்சொன்ன அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பியவை என்பதுதான் கவனிக்க வேண்டிய சேதி.
இப்படியான புத்தெழுச்சியுடன் ஒரு உயர்ந்ததளத்தை நோக்கி தன் சிறகுக்களை விரித்து பறக்க துவங்கிய தமிழ்சினிமா அடுத்த பத்துவருடத்தில் தடதடவென பெரும் பாதாளத்தை நோக்கி சரிந்து உருண்டது என்று சொன்னால் கூட மிகையில்லை..¢ இந்தி சினிமாவை போலவே தமிழ்சினிமாவும் தான் தீட்டிய கத்தியாலேயே குத்துபட்டு குற்றுயிராக சரிந்தது. அதுவரையிலான் நாயகனுக்குண்டான எந்த முக அம்சம் எதுவும் இல்லாத அமிதாப் கதாநாயகனாக அங்கீகரிக்கப்பட காரணமே அங்கு எழுந்த இடைநிலைசினிமாக்களின் அலைதான்.புவன் ஷொம் ,அபிமான், குட்டி போன்ற கிட்டதட்ட இருபது இடைநிலை சினிமாக்களால் மூலமாக கதாநாயகனாக கட்டியமைக்கப்பட்ட அமிதாப் எனும் அதே நடிகர்தான் பிற்பாடு தனது .டான்,தீவார் போன்ற படங்களின்மூலமாக கடந்துவந்த பாதையை முழுவதுமாக சிதறடித்தார்.தொடர்ந்து குர்பானி,ஷான் போன்ற வெத்து பிரமாண்டங்களும் வந்து ¢ இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கி எடுத்தது தனிக்கதை. . அமிதாப் அங்கு செய்த அதேகாரியம் இங்கு கமல் மற்றும் ரஜினியால் நிகழ்த்தப்பட்டது.இதில் என்ன வேதனை என்றால் இருவருமே நல்ல சினிமாவின் மேல் ஆர்வம் கொண்டிருந்தவர்கள்.அவள் அப்படித்தான் உருவாக கமல்தன் முனைப்பாக இருந்து ரஜினியையும் ,ஸ்ரீப்ரியாவையும் வற்புறுத்தி அதில் நடிக்கவைத்தவர்.பதினாறுவயதினிலே முள்ளும் மலரும், அவளப்படித்தான் என அவ்ர்கள் உருவக்கிய பாதை முரட்டுக்காளை சகலகலா வல்லவன் போன்ற படங்களின் மூலமாக அவர்களாலேயே முடித்துவைக்கப்பட்டது.சாதாரண மனிதனை மக்கள் ஒன்றுகூடி கைகளைதட்டி அவனை நட்சத்திரமாக மாற்றி விட்டபின் வானத்தில் சென்று ஒய்யிக்கொள்வது இயல்பான ஒன்றுதான்.அமிதாப் கமல் ரஜினியின் இந்த மாற்றத்திற்கு சமூகமும் ஒரு முக்கியமான காரணம்.
80பதுகளின் துவக்கத்தில் நிகழ்ந்த இந்த முக்கிய த்டமாற்றத்தை தவிர்த்துவிட்டு 90 வரையில் வெளியான தமிழ் திரைப்படங்களை பொதுவாக பார்க்கும் போது ஆச்சர்யமூட்டக்கூடிய பல அதிசய மாற்றங்கள் திருப்பங்கள் நிகழ்ந்திருப்பதை நம்மால் கண்டுணர முடியும்.கமல் ரஜினியின் விஸ்வரூப வளர்ச்சி ஒருபுறமிருக்க இன்னொரு புறம் அவர்களையே மிரட்டும் வகையில் இயக்குனர் கம் நடிகர்களாக அவதாரமெடுத்த பாக்யராஜ், டி.ராஜேந்தர் மற்றும் மெல்லியல்பும்,பெண் தன்மைகளும் நிரம்பிய மோகன், ராமராஜன் போன்ற நாயகாகளின் திடீர்¢ எழுச்சி, ¢ இளையராஜாவின் இசை அரசாட்சி,¢ தொழில்நுட்பங்களோடு களமிறங்கிய திரைப்பட் கல்லூரி மாணவர்களின் படையெடுப்பு,குறைந்த வெளிச்சத்துடனான மணிரத்னத்தின் வருகை போன்றவை இக்காலகட்டத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள. திரையுலகின் உள்ளீ¢¤டாக நிகழ்ந்த இப்படியான மாற்றங்கள் ஒருபுறமிருப்பினும் மெற்சொன்ன பத்துவருடங்களை ¢ பார்வையாளர்களின் ரசனை மாற்றத்தை அடிப்படையாக வைத்து ஒருவசதிக்காக 1. 1980--_ 1982¢, 2. 1982_1986 3. 1986_1989 இப்படி பிரித்து பார்க்கலாம்.
1..1980--_ 1982¢, பொற்காலத்தின் நீட்சி.
தமிழ் சினிமாவின் பொற்காலம் என வகைபடுத்த முடியுமானால் அத்னை 1977 லிருந்து 82க்கு இடைப்பட்ட காலமாகத்தான் கருத முடியும்.துரதிர்ஷ்ட வசமாக இக்கட்டுரை 80க்கு பிறகான படங்களை பற்றிமட்டுமே அலசவேண்டிய நிர்ப்பந்தங்களை கொண்டிருப்பதால் 80க்கும் 82க்கும் இடையிலான் காலத்தை பொற்கால்த்தின் நீட்சி என்றுகூட குறிப்பிடலாம்.முந்தய மூன்றுவருடங்களில் இருந்த எழுச்சி அலை இக்காலக்கட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தனது சரிவை நோக்கிய பயணத்திற்கு ஆட்படுத்திக்கொண்டாலும் சில குறிப்பிடும்படியான படைப்புகளும் வெளியாகின.இவற்றுள் 1980ல் வெளியான ஒரு த்லை ராகம் கிட்டதட்ட பதினாறுவயதினிலேவுக்கு சரிசமமான பாதிப்பை த்மிழ்சூழலில் உண்டாக்கி திரையுலகிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அலையை உருவாக்கியது .நாயகனை புறக்கணித்த இந்த கதையிலும் உள்ளும் புறமுமாக சமூகம் அசலாக உரித்துவைக்கப்பட்டிருந்தது.பெல்பாட்டம்,பாபி காலர், அதிரும் டிரம்ஸ் வாத்தியங்கள,வேலையில்லாதிண்டட்டம்¢ என அக்காலத்திய இளஞர்களின் உல்கத்தை முதல் முறையாக இப்படம் திரையில் வெளிப்படுத்தியிருந்த காரணத்தால் அரங்குகளனைத்தும் திருவிழாபோல களைகட்ட துவங்கின.படத்தில் பாதியில் வந்து போன ஒரு தாடிக்கார இளைஞர்தான் இயக்குனர் என்பது பிற்பாடு தெரியவந்தது.அடுத்த பத்து வருடங்களில் தமிழ்சினிமாவில் அவர் குச்சி சுழற்றி கமர்ஷியல் வீடுகட்டியது தனிக்கதை..இப்ப்டத்தினை தொடர்ந்து நகரத்து இளனஞர்களின் பாடுகளை கதைக்களனாக கொண்டு பாலச்சந்தரின் இயக்கத்தில் வறுமையின் நிறம் சிகப்பு1980 ராபர்ட் ராஜசேகரின்பாலைவனச்சோலை 1981 போன்ற படங்கள் எதார்த்தத்துடன் காவிய சோகத்தை பிரதிபலித்தன.அதே சமயம் இதன் தொடர்ச்சியாக இதே ப்ரச்னையை மயமாக கொண்டுபாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் ¢ அவ்ருக்கு தோல்விபடமாக அமைந்து அதுவரையிலான அவர்து தீவிரத்தனமையிலிருந்து விலக்கி இளைஞர்களை வைத்து ஜனரஞ்சக படத்திற்கு தாவ வைத்தது.தனது குருநாதர் பாரதி ராஜாவின் மூலமாக புதியவார்ப்புகள்1979 படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான பாக்யராஜ் சுவர் இல்லாத சித்திரங்கள் 1979, ஒரு கை ஓசை 1980 பாமா ருக்மணி போன்ற தனது துவக்க கால படங்களின் மூலம் அக்காலத்தில் பலரது கவனிப்புக்கு ஆளானர்.எப்படி இந்தி பார்லேல் சினிமாவில் நாயக அம்சமே இல்லாத அமே¢£ல் பலேகர்,நஸ்ருதீன்ஷா போன்ரவர்கள் நாயகர்களாக வலம் வந்தார்களோ தமிழிலும் அது போல சந்திரசேகர்,பிரதாப் போத்தன,விஜயன்¢ போன்றவர்கள் இக்காலகட்டத்தின் பெரும்பாலான படங்களில் நாயகனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற்னர். மேலும்¢ நாயகர்களை பொலவே இக்காலத்தில நாயகிக்கும் புற அழகு இரண்டாம் பட்சமாக கருதப்பட்டது ஷோபா,சுஹாசினி யை தொடர்ந்து சரிதாபோன்றவர்களும் நாயகிகளாக அறிமுகமாகி ரசிகர்களின் இத்யங்களுக்குள்நீங்கா இடம் பிடித்தனர்.பிரதாப் நடிப்பில் வெளியாகி தேசியவிருதுகளை பெற்ற மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே, 1980 பாலுமக்ந்ந்திராவின் மூடுபனி,1980 போன்றவை தமிழ் சினிமாவின் அந்தஸ்தை உலகத்த்ரத்திற்கு அழைத்து சென்றன என்றாலும் மிகையில்லை. மேற்சொன்ன 80க்கு முந்தைய படங்களில் இருந்த சமூக எதார்த்தம் இப்ப்டங்களில் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டு காட்சி ரூபமான ஒருவித கவித்துவ அழகியல் இதில் பிரதானமாக கையாளப்பட்டன.பாலுமகேந்திராவால் துவக்கப்பட்ட இந்த கவித்துவ காட்சி அழகியல் அசோக்குமார்,நிவாஸ(எனக்காக காத்திரு 1981)¢ போன்ற ஒளிப்பதிவாளர்களால் தொடர்ந்து கையகப்படுத்தப்ப்ட்டன. ஒளிப்பதிவுக்கு முக்கியம் தந்து இவர்கள் உருவாக்கிய இந்த அழகியல் அலைதான் பின்னாளில் மணிரத்னம் எனும் அழகியலின் இந்திய பிரதிநிதி உருவாக தூண்டுகோளாகவும் பாலமாகவும் அமைந்தது..காட்சி அழகியலின் வரவேற்பு காதல் படங்களுக்கும் தோரணம் கட்டதுவங்கியது. பாரதி வாசு இயக்கத்தில் வெளியான .பன்னீர் புஷ்பங்கள் 1981,படம் கடசிவரை தொட்டுக்கொள்ளாத காதலர்களை காண்பித்தது.ஏறக்குறைய இப்ப்டம் வெளியான அதேகாலகட்டத்தில் வெளியான பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை 1981,அத்ற்கு நேர்மாறாக பாலியல் துடிப்பு மிக்க காட்சி அமைப்புகளுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடதகுந்தது.தொடர்ந்து பல உன்னத காதல் படங்கள் வந்தாலும் அவ்ற்றுள் துரையின் இயக்கத்தில் வெளியான கிளிஞ்சல்கள் எதார்த்த பின்புலத்துடனான காத்லை சித்தரித்து மக்கள் மனத்தை கொள்ளையடித்தது. இது போன்ற காதல்படங்களின் திடீர் வருகைக்கு பால்சந்தரின் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி சென்னையில் சக்கைபோடு போட்ட மரோ சரித்ராவும் ஒரு காரணம். காதலை போலவே அக்காலகட்டத்தில் புரட்சிக்கும் ஒரு அதீத முக்கியத்துவம் சூழலில் வந்து சேர்ந்தது. மக்கள் ப்ரச்னைகளை பேசும் தண்ணீர் தண்ணீர்,1981,ஏழாவது மனிதன1982¢ சிவப்பு மல்லி 1982 கண்சிவந்தால் மண்சிவக்கும்1983 போன்ற படங்களுக்கு ம்க்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு தமிழ்சினிமாவில் எப்போதும் நிகழ்ந்திராத ஆச்சர்யமான ஒன்று.சட்டம் ஒரு இருட்டறை 1981மூலம் அறி¤முகமன இயக்குனர் எஸ் ஏ. சந்திரசேகர் தொடர்ந்து சட்டத்தை பின்புலனாக ஜொண்ட படங்களாக கொண்டுவந்தார்.அதே போல தொழில் நுட்பம்யையக்கம் போன்றவற்றில் ஆளுமை குறைவாக இருந்தாலும் வித்தியாசமான கதைகள் பல இக்காலத்தில் தொடர்ந்து வெர்றி தோல்வியை பொருட்படுத்தாது வந்துகொண்டிருந்தன என்பது இக்கால்த்தின் விசேஷம்.எச்சில் இரவுகள்,1982சுமை,1981போன்ற தீவிரத்த்னமை கொண்ட படங்களும்,எம்.ஏ.காஜா எனும் இயக்குனரின் லோபட்' ஜெட் ' படங்களும் இப்பங்களிப்பை செய்தன.
இப்படியாக எதார்த்தம் அழகியல்,காதல்,மற்றும் புரட்சியை பேசும் வித்தியாசமான படங்கள் முன்னூறாவது நாள் நானூறாவது நாள் என ¢தினத்தந்தியில் முழுப்பக்க விளம்பரங்களுடன் பட்டயை கிளப்பிக்கொண்டிருந்த அதே வேளையில் ரஜினி கமல் இருவரும் இதற்கு இணயாக கமர்ஷியல் வெற்றிகளை ஈட்டிவந்தனர்.1980ல் வெளியான கமலஹாசனின் குரு, மற்றும் ரஜினியின் பில்லா முரட்டுக்களகாளை போன்ற படங்கள் அபாரவெற்றியினால் தமிழ் சினிமாவில் எம்ஜி ஆருக்கு பிறகு மீண்டும் ஆக்ஷன் ஹீரோ யுகம் ஆரம்பம்மானது.மக்களை திருதிபடுத்தும் விதமான சண்டை மற்றும் கேளிக்கை நடன காட்சிகளின் திணிப்பு அதே யுகம் இப்போது வேறுவிதமான வடிவத்திற்கு மாறியிருந்தது.அழுத்தமான கதைபடங்களாக தந்து மக்கள் மனதில் நீங்காஇடம் பிடித்த நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் கூட தனது திரிசூலம்1979, அடைந்த இமாலய வெற்றிக்கு பிறகு லாரி டிரைவர் ராஜாகண்ணுவாக மாறி ஸ்ரீப்ரியாவுடன் சேர்ந்து கொண்டு வயதுக்கு மீறிய குத்தாட்டங்களை போடதுவங்கினார்கைப்படியான வணிகசினிமாக்கள் பெரும்பாலானவற்றில் ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீப்ரியா ஆகிய இருவர்மட்டும் ஜோடிகளை கைமாற்றிக்கொண்டு தொடர்ந்து நாயகிகளாகவலம் வந்தனர்.நகைச்சுவையில் சுருளிராஜனின் அங்க அசைவுகள் அர்ங்குக்களில் சிரிப்பலைகளை உருவாக்கின.புதுவரவுகளில் கார்த்திக் விஜயகாந்த் பிரபு ஆகியோர் டாக்கு பிடித்த்னர்.சண்டை முக பாவம் ஆகியவற்றில் ரஜினியை சாயலாக கொண்டு சட்டம் ஒரு இருட்டறை மூலம் பரபரப்பாக பேசப்ப்ட்ட விஜயகாந்த் கண்களில் மட்டுமல்லாது கருத்துகளிலும் சிவப்பு காட்டி பயமுறுத்தினார். .இத்துடன் 1979ல் வெளியான ஜெகன் மோகினி லஷ்மி பூஜை போன்ற டப்பிங் பேய்படங்கள்வேறு சக்கை போடு போட்டன.இப்படங்களின் பிரதான் நாயகியான ஜெயமாலினிதொடர்ந்து இரண்டுவருடங்களுக்கு தமிழ்கத்தின்மூலை முடுக்குகள்தோறும் அனைத்து சிகை அலங்கார கடைகள மற்றும் தையல் கடைகளின் ¢ சுவர்களில் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். .பின் ஒரு சுப யோக சுப தினத்தில் அவரது படம் கிழிக்கப்பட்டு அந்த இடத்தில் இன்னொரு புதிய நடிகை இடம் பிடித்தார்.அவரது போதையூட்டும் விழிகளும் உதட்டுசுழிப்பும் தமிழ்நாட்டையே ஒட்டு மொத்த்மாக தர்ம பரிபாலனம் செய்து வழிநடத்தியது. .வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய சில்க் எனும் அந்த நடிகைக்கு குழந்தை மற்றும் குடும்பபெண்கள் வாலிபர்கள்,வயோதிகர்கள் மட்டுமல்லாது பராசரன் முதல் பராரி வரை வித்தியாசமெ இல்லாமல் ரசிகர்களாக இருந்தனர்.¢.அவரது காலத்தின் உச்சமாக இரண்டு படங்கள் வெளியாகின.இரண்டிலுமே நாயகன் கமலஹாசன்.1982ல் வெளியான இந்த இரண்டுபடங்களுக்கும் தெரிந்தொ தெரியாமலோ பலஒற்றுமைகள் இருந்தன.அதில் ஒன்று சகலகலாவல்லவன் ,மற்றொன்று மூன்றாம்பிறை.கமர்ஷியல் பாதி கலைபாதியாக தடுமாறிக்கொண்டிருந்த கமல்ஹாசனின் அன்றைய மனோநிலையை இப்படங்களின் ஒருசேர வெற்றி உறுதிப்படுகிறது.ராஜபர்வை1981 எனும் இக்காலத்தின் அழகான தோல்வி கமலிடம் உருவாக்கிய அழுத்தம் மூலமாக வெளிவந்த படம் சகலகலாவல்லவன்.ஒருவேளை சகலகலாவல்லவன் முன்பாக வந்து மூன்றாம்பிறை 1982அடுத்தாக வெளியாகியிருந்தால்கூட தமிழகம் ஓரளவுமாற்றத்தை அனுபவித்திருக்கும் ஆ£னால் துரதிர்ஷ்டவசமாக பிப்ரவரியில் மூன்றாம்பிறை உருவாக்கிய மகத்தான அலையை அடுத்து ஆகஸ்டில்வெளியான சகலகலாவல்லவனின் வெற்றி தவிடுபொடியாக்கியது என்பதுதான் உண்மை.கலர்கலாரன ஆடைகள்ஜிகினாசெட்டுகள் பாட்டு கூத்து பைட்டு என புதிய கமர்ஷியல் சூத்திரம் உருவாக்கப்பட்டு எதார்த்தம் அழகியல்,போன்ற வார்த்தைகள் தமிழ்திரை யுலகிலிருந்து ஓடஓட விரட்டியடிக்கப்பட்டன.
2. 1982_1986. டிஸ்கோ யுகம் 82 ஆம் ஆண்டில் வெளியான படங்களின் பட்டியலைபார்க்கும்போது தமிழ்சினிமாவின் காட்சிமாற்றத்தை நம்மால் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.கமர்ஷியல் காதல்படங்கள் என்று ஒட்டு மொத்த்னாக இக்காலகட்டத்தில்வெற்றிபெற்¢ற படங்களை அடையாளப்படுத்த முடியும்.தூறல்நின்னு போச்சு,1982,டார்லிங் டார்லிங்1982, என பாக்யராஜின் இரண்டுபடங்கள் வரிசையாக வெர்றொன.தூறல் நின்னு போச்சு வெளியானபோது அப்படத்தில் வரும் நாயகனை போல கழுத்தில் மப்ளர்சுற்¢றிக்கொள்வது இளைஞர்களிடம் பேஷ்னாக இருந்தது.பெல்ஸ்பெல்பாட்டம் போய் ¢ பின்பக்கம் நாய்காதுவைத்த பாக்கெட்டுகளுடன் நேரோ பேண்டுகளுடன் க்மலஹாசன் தன் சட்டம் சவால் பொன்ற படங்களில் உலாவந்தார்.அவரது தூக்கிவாறப்பட்ட ஹேர்ஸ்டைலுக்கு டிஸ்கோ என பெயர் சூட்டப்ப்ட்டது.அவர் சகலகலாவல்லவனில் ஆடிய ஆட்டத்தை அனைவரும் டிஸ்கோ நடனம் என அழைத்துமகிழ்ந்தனர்.இந்தகலாச்சரத்தின் மூழு பிரதிபிம்பமாக கமலஹாசன் திகழ்ந்தார்.பெண்களை போல பாதிகைகள்வெளித்தெரியும் மெகாஸ்ல¦வ்ஸ் டி.ஷர்ட்டும் ஜீன்ஸுமாக் பெரும்பாலான நாயகர்கள் வலம் வந்தனர். இயக்குனர்களான பாரதிராஜா பாக்யராஜ் போன்றவர்கள் கூட இந்த வகைஆடைகளை அணிந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து மகிழ்ந்தனர்.சொல்லி வைத்தார்போல பல்புகள் அணைந்து அணைந்து எரியும் ஜிகினாசெட்டுகளுடன் கூடிய நடன காட்சிகள் கமர்ஷியல் சூத்திரங்களில் ஒன்றாக இடம்பெற்றது.இந்தியில் வெளியான டிஸ்கோ டான்சரை தொடர்ந்து தமிழில் ஆன்ந்த்பாபுவின் ரப்பர் நடனத்துடன் பாடும்வானம்பாடி எனும் படம் மூழ்வதும் டிஸ்கோவை மையாக கொண்டு வெளியானது.ஆனந்த்பாபுவின் இந்த புதிவித நடனத்தை கமலஹாசன் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஆனாலும் அந்தபடம் மிகப்பெரியவெற்றியை பெற்றது.சட்டம்,சவால்,வாழ்வேமாயம் தூங்காதே தம்பி தூங்காதே ¢என தொடர்வெர்றிகளைதந்துகொண்டிருந்த கமல் அவ்வப்ப்போத் இந்திபாஷைக்கும் சென்று நடனமாடிவந்தார்.ரஜினியின் வெற்¢றிகாலமாற்றங்களுக்கு அப்பாற்ப்பட்டதாக இருந்தது.பாயும் புலி தாய்வீடுதங்க மகன் அடுத்த வாரிசு என அவரும் தன் பங்குக்கு டிஸ்கோசகிதம் சண்டையும் போட்டுவந்தாலும்மூன்றுமுகம் நல்லவனுக்கு நல்லவன் எங்கேயோ கேட்ட குரல் புதுக்கவிதை நெற்றிக்கண் போன்றவித்தியாசமான கதையம்சம்கொண்ட கமர்ஷியல்சண்டைபடங்களி¢லும் நடித்து சூப்பர்ஸ்டாராக தொடர்ந்து ஜொலித்தார்.கமலஹாசன் கூட எனக்குள் ஒருவன், போன்றதோல்விபடங்களை சந்திக்கவேண்டியிருந்தது ஆனால்ரஜினியின் எந்த படத்திற்கும் தோல்வி முகம் காட்டவில்லை.ஒரு புறம் கமல் ரஜினியின் வணிகசூத்திரங்களுடனானபடங்கள் தொடர்வெற்றி பெற்றுக்கொண்டிருந்த இதே வேளையில் பாலுமகேந்திராவின் கோகிலா கன்னட படத்தின் மூலம் அறிமுகமான ஒருநடிகரின் வருகை தமிழ்ச்சூழலை ஒரு ஆச்சர்யமான பாதிப்புக்கு உள்ளாக்கியது.சொல்லிவைத்தார் போல அவர் நடித்த அனைத்துபடங்களும் தொடர்ந்து வௌ¢ளிவிழாபடங்களாகவே அமைந்தன.அவர் மேடையில் மைக் பிடித்து பாடுவதில் தமிழ் கூறும் நல்லுலகம் அப்படி என்ன அதிசயத்தை கண்டு வியந்ததோ தெரியவில்லை.சொல்லி வைத்தார் போல சிம்பாலிக்காக பயணங்கள் முடிவதில்லை1982, என்பதில் ஆரம்¢பித்த நடிகர் மோகனின் மைக் பயணம் கோபுரங்கள் சய்வதில்லை,இளமை காலங்கள்,உத்யகீதம்,இத்யகோயில்,விதி,குங்குமசிமிழ்,தென்றலே என்னை தொடு மெல்லதிறந்தது கதவு பிள்ளை நிலா என தொடர்ந்து சிக்ஸர்மழைகளாக பொழிந்துதள்ளியது.ஆர்.சுந்தர்ரராஜன் ,மணிவண்ணன்,கே.ரங்கராஜ,ம்னோபாலா¢ போன்ற இயக்குனர்கள் இவ்வகைபடங்களின் இயக்குனர்களாக பிராகாசித்த்னர்.உறுத்தாத ஒரு காதல் கதை,ப்ளஸ் கவுண்டமணி செந்தில் காமெடி ப்ளஸ் இளயராஜாவின் ஐந்து அல்லது ஆறுபாடல்கள் இது தான் இவர்களது பார்முலா.பாலுமகேந்திரா, மகேந்திரன் படங்களின் மிச்சசொச்ச மென்னுனர்வுகளின் நீட்சியாக இருந்த இவ்வகைபடங்களில் கோவைதம்பி எனும் தயாரிப்பாளர் 'கொடிகட்டி 'பிராகாசித்தார்..மேற்சொன்ன அனைத்துபடங்களின் பாடல்களுமே வெற்றி எனும்வார்த்தைகளைக்கடந்து தமிழ்ர்களின் வாழ்வோடு இரண்டறகலந்து இன்றும் பலரேடியோ சேனல்களின் மூலம் இரவு நேர தமிழக்த்தை தாலாட்டிக்கொண்டிருக்கின்றன.
இந்திய அரசின் பொருளாதாரகொள்கை யில் உண்டான மாற்றத்தின் காரணமாக தமிழ் நாட்டுக்குள் வந்த திரைப்ப்டங்களில் சுசுகி யமாகா போன்ற பைக்குகள் தமிழ் சினிமாவுக்குள்ளும் ஓடத்துவங்கின.¢ அதிலும் முதன் முதல் எனும் பெருமையை கமல் புன்னகை மன்னன் மூலம் ¢¢ தக்க வைத்துக்கொண்டார். .தொடர்ந்த அவரது விக்ரம் ஒரு தோல்விபடமானாலும் அது காலமார்றத்தை பிரதிபலிப்பதில் முக்கிய பங்காற்றியது.கமலின் காக்கிசட்டையில் த்கடுதகடு என பேசிய சத்யராஜ் எனும் வில்லன் நடிகர் ரசிகர்களிடையே மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கினார்.தூர்தர்ஷ்னில்ல் அப்போது வெளியான அவரது பேட்டி அவரை காலத்தின் பிம்பமாக மக்களிடையே உயர்த்தியது. காதல் ஓவியம்1982 படத்திற்கு பிறகு வாலிபமே வா வா1982 என தடுமாறிய பாரதிராஜா மண்வாசனை 1983முதல்மரியாதை1985 கடலோரகவிதைகள்1986 எனும் மூன்று அழகான முத்துக்களைதந்து இரண்டவதுரவுண்டிலும் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார். பாக்யராஜின் சிஷ்யரான பாண்டியராஜன் கன்னிராசி ஆண்பாவ்ம் என ஒரே வருடத்தில்(1985) இரண்டு ஹிட்டுகளை தந்து பரபர்ப்பை உண்டகினர்.அம்பிகா ராதா சகோதரிகளுக்குள் கனவுகன்னி யுத்தம்நடந்தது உடன் இப்போட்டியில் பிற்படு ரேவதியும் சேர்ந்துகொண்டார்.¢எப்போதும் போலராதிகா சுகாசினி ஆகியோர் தங்களுக்கேற்ற பாத்திரத்தில் முத்திரைகளை பதித்தனர். இக்காலட்டத்தில் திடுமென பெருகிய வீடியோ எனும் புதுவரவு பலரையும் பயமுறுத்தியது.முந்தானை முடிச்சு1983 இக்காலக்கட்டத்தின் மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது.இப்படத்தில் இடம்பெற்ற முருங்கைக்காய் வைத்தியம் ம்க்களை பெருமளவுபாதித்து .பின் முருங்கைக்காய் தமிழ்நாட்டின் குழுவுக்குறி யாகவும் மாறிப்போனது பூவிலங்கு படத்தின் மூலம் தமிழுக்கு இன்னிமொரு கறுப்பு நடிகராக முரளிவந்தார். சிவக்குமார் த்ண்டிக்கப்பட்ட நியாயங்கள்,நான்பாடும் பாடல்,தீர்ப்புகள் திருத்தபடலாம்,ஒரு இந்திய கனவு போன்ற படங்களின் மூலம் தனது மூன்றாவது இன்னிங்ஸை தொடர்ந்து கொண்டிருந்தார்.கே.பாலசந்தரின் இயக்கத்தில் இக்காலகட்டத்தில் உருவான சிந்துபைரவி இசை தமிழ் இசைக்கு கவுரவம் தந்தது.சில தோல்விகளுக்கு பாலசந்தருக்கு மீண்டும் வெற்றியையும் புகழையும் தந்த படம் இது.இவைகளல்லாது நான்குவருடங்களுக்கு முன்பிருந்த எதார்த்தவகைபடங்களில் ஒன்றுகூட த்லைகாட்டவே இல்லை என்பதுதான் ஆச்சர்யபடத்தக்க நிகழ்வு. அதே போல பாரதிராஜா மகேந்திரன் பாலுமகேந்திரா போன்ற சென்றத்லைமுறையின் காட்சி மொழி அறிந்த படைப்பாளுமை மிக்க இயக்குனர்கள் அவர்களுக்கு பின் தோன்றவே இல்லை.அந்த குறை 'மவுன ராகம'¢ படத்தின்மூலமாக தீர்ந்தது,அத்தோடு தமிழ் சினிமாவில் புதியமாற்றங்களின் வரத்தும் நிகழதுவங்கியது.
03.1986-_1989 துவங்கியது தொழில்நுட்ப அலை.அது ¢ வரை திரைப்படக்கல்லூரி என்றால் அது எங்கிருக்கிறது என்றுகூட தெரியாத் தமிழ்ர்களுக்கு அத்ன் முகவரியை சொல்லும் விதமாக 86ல் ஊமை விழிகள் வந்தது.முழுவதும் கல்லூரிமாணவர்களால் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தன் முன் அமர்திருந்த பார்வையாளர்களின் அதுவரையிலான தி¢ரை அனுபங்களையெலாம் ஒரே நாளில் ஓரங்கட்டி அவர்களை நவயுகத்தின் மனிதர்களாக புதுப்பித்தது. .தூரத்து இருட்டில் ஒரு புள்ளியாக வந்து பின் அதே ஷாட்டில் அருகாமையில் ஒரு மேட்டிலிருந்து வரிசையாக கார்களின் ஹெட்லைட் வெளிச்சம் சரமாரியாக வந்து பெரும் இரைச்சலுடன் கடந்து போகும் காட்சியின் போது தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டி அரங்குகளில் கூட கைதட்டல் அதிர்ந்தது. அது போல படத்தில் இடம்பெற்ற பரபரப்பான காட்சியொன்றில் இரும்¢புகதவு திறக்கும் க்ரீச் சத்தம்,கோச்வண்டியின் சலங்கை அதிரும் தனித்தனயான சத்தம் போன்றவற்றை அதுவரை ஆங்கிலபடங்களில் மட்டுமே அனுபவித்திருந்த மக்களுக்கு அக்ண்ட திரையில் இப்ப்டம் புது அனுபவத்தை உருவாக்கி கொடுத்தது.பாடல்களின் வரிகள் முதற்கொண்டு பாடல்பதிவு இசை என அனைத்திலுமே புதிமை அலையை ப்ரவ விட்ட இப்படத்திற்கு பின் குறை காலம் ஆபாவாணன் என்ற பெயரே தமிழர்களுக்கு மிகப்பெரிய பிரமிப்பையும் கிளர்ச்சியையும் உண்டாக்கிதந்தது...விஜயகாந்த இறுதியாக தனக்கான பாணியை இப்படத்தின் மூலம் கண்டுகொண்டார். ¢ க்கு இப்படி திடுமென மாறிய த்மிழ்மக்களின் ரசனைக்கு சரியான தீனியாக அமைந்தது அடுத்தாதாக வந்த மவுன ராகம்.படத்தின் இயக்குனரான மணிரத்னம் ஏற்கனவே பகல் நிலவு இதய கோயில்.போன்ற படங்களின்மூலம பரவலாக தமிழ்நாட்டில் தலைகாட்டியிருந்தாலும் தான் ஸ்ரீதர் பாரதிராஜா மகேந்திரன் பாலுமகேந்திரா வரிசையிலான கவித்துவ அழகியல் இயக்குனர் என்பதை இப்ப்டத்தில்தான் அழுத்தம் திருத்தமாக முத்திரையை பதித்திருந்தார்.அதிகம் பேசாத இப்ப்டத்தின் நாயகனான மோகன்,அதிகம் பேசும் நாயகி ரேவதி, இளமைதுள்ளும் கார்த்திக்க்கின் உடல் மொழி மற்றும் உரையாடல் என அனைத்துமே மேட்டிமைபாவனைகளுடன் தமிழ் ரசிகர்களுக்கு ஓருவித அன்னியத்த்ன்மையை உணர்த்தியபோதும் அத்ன் வசீகரத்தில் அனைவரும் தங்களை இழந்த்னர் என்பதுதான் உண்மை.¢ இப்பட்ம் பார்த்துவிட்டு வெளியேவரும் இளைஞர்கள் பலரும் தங்களை கார்த்திக்காக உணர்ந்து ப்டத்தில் அவர் பேசுவதை போல சந்திரமவுலி.. மிஸ்டர் சந்திரமவுலி என கையை உய்ரே தூக்கி கூவிக்கொண்டனர். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவிலிருந்த கவர்ச்சியும் பில்டரின் ஜாலமும் அனைவரையும் வசீகரித்தது.கலை இயக்குனர் என ஒருவர் திரைத்துறையில் இருக்கிறார் என்பதை இப்ப்டத்தின் மூலம் தோட்டாத்ரணி கோடம்பாக்கத்திற்கு உணர்த்தினார்.இதேகூட்டணியின்மூலம் அடுத்த ஆண்டே வெளியான நாயகன் காட்சியமைப்பு மற்றும் படப்பதிவு படத்தொகுப்பு என அனைத்து வகையிலும் ஓரளவு உலகத்தரத்தை நெருங்கியது.உடை,அலங்காரம் போன்றவையின் முக்கியத்துவம் இப்படத்தின்மூலம் அங்கீகாரம் பெற்றது.படத்தில் சிறுவயது கமலஹாசனின் தழும்பு வளர்ந்த நிலையிலும் காணப்பட்டதை கவனித்த பார்வையாளர்கள் கலைக்கு உண்மையாக இருந்த இயக்குனரின் திறமையை கண்டு வியந்தனர்.என்றாலும் பிற்பாடு இத்த்ரைப்ப்டம் பிராண்டோ நடித்து 72ல் வெளியான காட்பாதர் படத்தின் ¢ தழுவல் என தெரியவந்தபோது அதன் மீதான மயக்கங்கள் நீங்கியது என்றாலும் மணிரத்னத்தின் மிகச்சிறந்த படமாக இன்றுவரை மதிப்பிடப்படுவது நாயகன் மட்டுமே.தொடர்ந்தவரது அகனிநட்சத்த்ரம் ,இதயத்தை திருடாதே போன்றபடங்கள் இளைஞர்களை சுண்டி இழுத்தன. இப்படங்களில் அழகும் இளமையுமான நாயகிகள் சிகரட்பிடிப்பதும் 'ஓடிப்போலாமா 'என துணிச்சலாக ஒரு ஆணைபார்த்து கேட்பதும் கலாச்சா¢ர அதிர்ச்சிகளை உண்டாக்கி மதிப்பீடுகளை கலைத்துபோட்டன.அதேசமயம் தமிழகத்தின் சாதாரணமனிதனுடைய வாழ்வுக்கும் இத்திரைப்படங்களுக்குமிடையிலான இடைவெளி பாரதூரமானது¦ இப்பபடங்களை பார்ப்பதற்கு தியேட்டருக்கு கையில் மெழுவர்த்தியுடன்தான் போகவேண்டும் என பத்திரிக்கைகளும்¢¢ வெகுஜனமக்களும் தொடர்ந்து பகடி செய்தனர்.அதேசமயம் அக்னிநட்சத்திரத்தில் வரும் ஒருபாடல்காட்சியில் கடற்கரை மணலில் கன்னத்தில் ஓட்டிக்கிடக்கும் மணல் துகல்களுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடிநாயகி நிரோஷா திரும்பிபடுக்கும் ஒரு க்ளோசப் ஷாட்டுக்குக்காக அரங்கமே கைதட்டி மகிழ்ந்த சம்பவங்களும் நடந்து கொண்டிருந்தன.அதேபடத்தின் இன்னொரு பாடலில் இளஞர்கள் ரயில்பெட்டிகளை தாண்டும் லோஆங்கிள் ஷாட்டுக்கும் நகர அர்ங்க்குகளில் ரசிகர்களின் விசில் பறந்ததை மறப்பதற்கில்லை.தமிழ்நாட்டில் பாலுமகேந்திராவுக்கும் பி.சி.¢¢ ஸ்ரீராமுக்கும் கிடைத்திருக்கும் இத்தகைய கைத்ட்டல் பெருமை இந்தியாவின் மற்ற மாநில ஒளிப்பதிவாளர்கள் எவருக்கும் கிடைத்திருக்காது என அடித்துக்கூறலாம்.பி.சி.ஸ்ரீராம் மணிரத்னம் பிரிந்த அடுத்தபடமான அஞ்சலி தோல்விபடமாக அமைந்த போது இதுவும் கூட ஒரு காரணமாக மக்கள் கதைக்கப்பட்டது தனிக்கதை.இப்படியான தொழில்நுடப படங்களுக்கான வரவேற்பு ஒரு புறமிருக்க இன்னொருபுறம் வழக்கமான கமர்ஷியல் மசாலா படங்கள் வெளுத்துவாங்கிக்கொண்டிருந்தன.மேற்சொன்ன படங்களுக்கு தன் கணிசமான பங்களிப்பை செலுத்தியிருந்த இளையராஜா மசாலாபடங்களுக்கும் பாரபட்சம் சுருதி பேதமில்லாமல் தன் மடை திறந்த இசைவௌ¢ளத்தை வழியவிட்டார்.இக்காலகட்ட்த்தின் முடிசூடாமன்¢னர்களாக ரஜினிகாந்த் இளையராஜா இருவருமே இருந்தனர்.படிக்காதவன்,மிஸ்டர் பாரத், மாவீரன் வேலைக்காரன் மனிதன்,குரு சிஷ்யன் தர்மத்தின் தலைவன் ராஜாதி ராஜா, ராஜாசின்னரோஜா மாப்பிள்ளை, என வெற்¢றிவரிசை ஏற ஏற ரசிகர்களி¤ன் எண்ணிக்கை படங்களின் வசூல் ஆகியவை ரஜினியின் படங்களுக்கு மழைக்கால ஏரி போல ஏறிக்கொண்டே யிருந்தன. ராஜாதிராஜா படம் வெளியான போது ஆக்ஷன் ,காமெடி போன்ற இமேஜ்களுடன் வசீகரமான கிளாமர் இமேஜும் சேர்ந்து கொண்டு இளைஞர்களை அலைக்கழித்த்து.அது நாள்வரை கமலிடம் இருந்துவந்த பேஷன் முன்னொடி என்ற இமேஜ் இப்படத்தின்மூலம் ரஜினிக்கு தாவியது. இதற்குமுன்பே மாவீரன் படத்தில் ரஜினியும் அம்மன் கோயில் கிழக்காலே,படத்தில் விஜயகாந்தும த்தமது ஹேர்ஸ்டலை நேர்வகிடு எடுத்து புதிய தோற்றத்தில் வந்து விட்டிருந்தாலும் ராஜாதிராஜா படத்தில்தான் பங் எனப்படும் இந்த புதுவித ஹேர்ஸ்டைல் மக்களிடையே தீயாக பற்றிபரவியது.ரஜினியின் இயல்பான வழுக்கை போல பலர் தாங்களாக ப்ளேடால் முன்நெற்றி மயிரை எடுத்துக்கொண்டு கிறுக்குதனமாக அலைந்தனர்.இதே படத்தில் ரஜினி அணிந்துவந்த தொளதொள பேகிபேண்டு தமிழ் இளைஞர்களின் தேசிய உடையாக மாறியது. முதன் முதலாக நடிகரின்ரசிகர்களுக்கென புதியதாக பத்திரிக்கை வந்ததும் இக்காலத்தில்தான் ராஜபாளையத்திலிருந்து வெளியான ரஜினிரசிகன் எனும் பத்திரிக்கையின் வெர்றியைகண்டு பிரபலபத்திரிக்கைகள் அத்னை அதிக விலை கொடுத்துவாங்கி தானே வெளியிடத்துவங்கியது.நடிகர்களின் போஸ்டர்களுக்கு மதிப்பு கூடியது.¢ இக்காலகத்த்தில் மக்களின்ன் வாழ்வும் சினிமாவும் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து காணப்பட்டது.¢ . அதுவரை ரஜினியோடு கமர்ஷியல் படங்களில் சரிக்குசரியாக போட்டியிட்டு வந்த கமல் நாயகன திரைப்படத்திற்கு பிறகு தனது ¢ பார்வையை பேசும்படம்1987 சத்யா 1988என பரிசோத்னைமுயற்சிகளின் பக்கம் திருப்¢பிகொண்டார்.இக்காலகட்டத்தில் தமிழ் பத்திரிக்கைகளுக்கு ஆஸ்கார் என்ற வார்த்தை புழங்க துவங்கியது.தானே எழுதிய கச்சிதமான திரைக்கதையுடன் காலத்துக்கு ஏற்ப தொழிநுடப கூட்டணியுடன் அபூர்வ ச்கோத்ர்ர்களில் மீண்டும் கமர்ஷியலில் களமிறங்கிய கமல் வெற்¢றிவாகைசூடினார்.
இவர்களை தவிர பாக்யராஜ் ,டி ராஜெந்தர்., சத்யராஜ்,பிரபு,முரளி அர்ஜுன் போன்றவர்கள் தத்தமது பாணியில் ¢ அவ்வபோது ஹிட்டுகளை கொடுத்துக்கொண்டிருந்தாலும் மவுனராகத்தின்மூலம் இரண்டாவது ரவுண்டுவந்த கார்த்திக் இக்கால்த்தின் இளவரசராகவே கவுரவிக்கப்பட்டார்.நல்ல குரல் அலட்டலான ந்டிப்பின்¢ மூலம் ரகுவரன் குண்சித்திரபாத்திரங்களில் பிரகாசித்தார்.பாக்ய்ராஜின் உதவியாளராக இருந்து பின் அதேபாணியில் இயக்கம் மற்றும் நாயகனாக அறிமுகமான பார்த்திபன் தன் ¢ புதியபாதை 1989 மூலம் தமிழுக்கு முதல் முறையாக ¢ ¢ஒரு லும்பனை நாயகனாக அறிமுகப்படுத்தினார்.இதேவருடத்தில் வெளியான பாசில் இயக்கத்தில் வெளியான வருஷம் பதினாறு, தொழில் நுடபமும் நல்ல திரைக்கதையும்¢ இணைந்த நேர்த்தியான ஒரு வணிகசினிமாக்களுக்கு பாதை போட்ட்¢து.¢ இந்த பாதையில் பிற்பாடு கிழக்குவாசல,கேளடிகண்மணி, புதுவசந்தம், போன்ற திரைப்படங்கள் ஆண்டுக்கு ஒன்றாக தொடர்ச்சியாக வந்து ஆச்சர்யத்தை உண்டாக்கின.
.இதேசமயத்தில் தமிழில் இன்னொரு அதிசயம் மெல்ல அர்ங்கேறிக்கொண்டிருந்தது. கிராமத்துவௌ¢ளந்தி மனித்னாக ஓரிரு படங்களில் நாயகனாக நடித்த ராமராஜன் எனும் நடிகரை துவக்கத்தில் அனைவரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை ஆனால்¢ மெல்ல நம்ம ஊரு நாயகன்,செண்பகமே செண்பகமே,எங்க ஊருபாட்டுக்காரன் என அவர் தொடர் வெற்¢றிகளாக குவிக்க குவிக்க ஒருபக்கம் த்யாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சிகடலில் திளைத்த்னர்.ஒருபக்கம் ரஜினிகமல் போன்ற நட்சத்திரங்கள் கோட்டும் சூட்டுமாக கலக்கிக்கொண்டிருக்க அதற்கு முற்றிலும் த்லைகீழாக வெறும் டவுசர்மட்டுமே அணிந்தபடி பாட்டுபாடி நயமாக மாட்டிடம் பால்கறக்கும் பாத்திரங்களில் நடித்து முன் சொன்ன் அநட்சத்திரங்களை விட அதிகமாகவும் கைதட்டல்களை ரசிகர்களிடம் பெற்று அனைவரையும் ஆச்சர்யபடுத்தினார்.ராமராஜனின் வெற்றியை கண்டு கோடம்பாக்கமே ஒட்டு மொத்தமாக மூக்கில் விரல்வைத்து வேடிக்கை பார்தத்து .மக்களின்தைந்த வினோத்ரசனை ப்த்திரிக்கையாளர்களையே ஆச்சர்யபடுத்தியது. ஒரு கட்டத்தில் அவர் அரசியலில்லும் குதிக்க ஆடுத்த்தாக வெளியாகவிருந்த படமொன்று அனைவரையும் மிகுந்த அளவில் எதிர்பார்க்க வைத்தது.இந்தபடத்தோடு இவர் காலி என அனைவரும் அந்தபடத்தின் ரீல¦சுக்காக காத்திருந்தனர். அப்போது வெளியான படம் தான் கரகாட்டக்காரன்.தமிழ் சினிமா அதுவரை இப்படி ஒரு வெற்றியை கண்டதில்லை..அதில் அதிர்ந்த ம்ரபான இசையானது தமிழ்நாட்டையே தொன்மங்களில் அதிரவைத்தது.க்ரகாட்டகாரனின் வெற்றிக்கு பிறகு ராமாராஜன் ரஜினிக்கு போட்டியா என்றுகூட சிலபத்திரிக்கைகள் எழுதுமளவிற்கு அன்று அவரது நிலை உச்சத்தில் கொடிகட்டி பறந்தது. உண்மையில் கரகாட்டக்காரனின் வெற்றி என்பதற்கு பின் பல உள்ளடுக்குகள் ஒளிந்திருப்பதை இன்றுவரை எவரும் கவனிக்கவில்லை.அவற்றுள் மிக முக்கியகாரணம் தமிழர்களின் மரபான அடையாளத்தை அது வெகுஜன ஊடகத்தின் மூலமாக மீட்டுருவாக்கம் செய்ததுதான.ஒரு சமூகத்தின் மூளை அடுக்குகளில் காலம்காலமாக படிந்திருந்த ஒரு ஓசைய்யை தன் இசையின் மூலம் தட்டி எழுப்பி அவனது உடலுக்குள் ஒரு களிப்பை ஏற்படுத்தியது.கங்கை அமரன் தெரிந்தோ தெரியாமலோ ராமராஜனுடன் சேர்ந்து இயக்குனராக பரிணமித்த இக்காலகட்ட திரைப்ப்டங்களில் தமிழ் அடையாளங்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார்.கனகாவின் அசலான தமிழ் முகம் கரகாட்டகாரனில் பெருமளவு இத்னை சாத்தியபடுத்தி தந்தது.அமலா ¢ குஷ்பு,ரேகா,சீதாபோன்றவர்கள் இக்காலத்தின் டூயட்டுகளை பகிர்ந்துகொண்டனர். .பாரதிராஜாவுக்கு இக்காலக்ட்டம் ஒரு இறங்குமுகம் என்றுகூட சொல்லலாம் கமலஹாசனை வைத்து அவர் இயக்கிய கமர்ஷியல் படமான ஒரு கைதியின் டைரி வெற்றி படமாக அமைந்தாலும் அவருடைய தனித்த்னமையை அது முழுவதுமாக இழந்திருந்தது.பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் புதுபுது அர்த்தங்கள் அவருக்கு இடையில் ஏற்பட்டிருந்த தொய்வை சரிசெய்தன.எம் ஏ காஜாவின் தொடர்ச்சியாக இராம்நாராயணன் ஒரே ஆண்டில் பத்துபடங்களை மேஸ்திரி போல இயக்கி ஆச்சர்யபடுத்தினார்.இவரது சொல்லுக்கு குழந்தைகளும் பிராணிகளும் கட்டுபட்டு வேலைசெய்தன.இப்படியான சூழலில் இயக்குனர் பாலுமகேந்திரா மட்டும் வீடு1988 என்ற படு சீரியசான படத்தை இயக்கி தமிழில் வணிக சினிமாவுக்கு மா¢ற்றான ஒரு கலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
80 முதல் 89 வரையிலான மேற்சொன்ன இந்த மூன்று காலத்தையும் ஒன்றிணைத்து பார்த்து ஒரேவரியில் குறிப்பிடுவதாக இருந்தால் இந்த பத்துவருடங்களை இளையரஜாவின் யுகம் என ஒரே சொல்லில் அடை¢யாளப்படுத்திவிடமுடியும்.வணிக ரீதியான அவரது தொடர் வெற்றியை கடந்து திரைப்படம் எனும் ஊடகத்தின் மூலமாக அவர் உருவாக்கி பரவவிட்ட இசை அலைகள் எண்ணற்ற கோடி ¢ தமிழர்களின் மூளைக்குள் அவர்களுக்கு மட்டுமேயான நிலப்பரப்பை வரைந்து தந்திருக்கிறது.இது நாள்வரை உபரி உணவாக இருந்துவரும் சாஸ்திரிய இசை மற்றும் மேற்கத்திய இசையுடன் ¢¢,வலியோடும் வாழ்வோடும்கலந்த தொன்மங்களின் ஓசையையும் நிலப்ப்ரப்பின் இசையையும் ஒன்றிணைத்து அதனை திரைப்ப்ட பாடல்களின் வாயிலாக ஊட்டிதந்திருக்கும் அவர்து இச்சாதனை வேறெந்த மெ¢£ழியிலும் இதுவரை நடைபெறாதது.¢ இப்படியாக ஒரு மொழிசார்ந்த சமூகத்தின் ஆன்ம உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அவர்து இசை இருந்துவந்த காரணத்தினால்தான் இசை பற்றிய எந்த அறிவும் இல்லாத ஒருவன் கூட அவரது பெயரை திரையில்கண்டதும் கைதட்டி மகிழ்ந்தான். ஒரு நல்ல இலக்கிய படைப்பு மனித மனதினுள்¢ புகுந்து செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தையும் அவரது இக்காலத்திய திரை இசை பாடல்கள்¢ செய்து காட்டியிருக்கின்றன..அதிலும் குறிப்பாக காத்ல் ஓவியம்,சிந்துபைரவி , இத்ய கோயில்,முதல்மரியாதை,கரகாடட்க்காரன்,தாய் மூகம்பிகை போன்ற திரைப்படங்களின் ¢பாடல்கள்¢ மூலமாகவும்,நெஞ்சத்தைகிள்ளாதே,ஜானி,முதல்மரியாதை,மவுன ராகம்,நாயகன்,போன்ற படங்களின் பின்னணி இசை மூலமாகவும் அவர் செய்திருக்கும் இந்த சாத்னை ஆழமும் அடர்த்தியும் கொண்டது. இத்னை கடந்து பாரதிராஜா,மகேந்திரன்,பாலுமகேந்திரா,மணிரத்னம் ஆகியோர் தங்களது இயக்கத்தின் மூல்மாக தமிழ் சூழலுக்கு இக்காலத்தில் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.
¢1980 துவங்கி 1989 வரையிலான பத்துவருடங்களில் வெளியான ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில ¢சிலவற்றை காலமாற்றங்களுக்கு அப்பாற்ப்பட்டு விளங்கும் சிறந்த படங்களாக நான் இங்கே தேர்ந்தெடுத்திருக்கிறேன். 1.நெஞ்சத்தை கிள்ளாதே,,2ஒருத்லைராகம.¢,¢3..தண்ணீர் தண்ணீர்4பாலைவன்சோலை 5பன்னீர்புஷ்பங்கள ,6கிளிஞசல்கள், 7மூன்றாம்பிறை, 8மண்வாசனை, 9மலையூர் மம்பட்டியான். 10,முதல்மரியாதை, 11கடலோரகவிதைகள. 12சிந்துபைரவி, 13வருஷம்பதினாறு, 14மவுனராகம், 15நாயகன் 16வீடு,¢ 17.புதியபாதை, 18கிழக்குவாசல்.
(தமிழின் தரமான முன்னணி இதழ்களில் ஒன்று தமிழ் சினிமா குறித்த தனது சிறப்பு மலர் ஒன்றுக்காக என்னிடம் எழுதக்கோரிய கட்டுரை இது.கடைசிவரை அந்த இதழ் வெளிவராத காரணத்தால் என் நண்பர் பொன். வாசுதேவன் லேட்டுக்கொண்டதற்கிணங்க எதிர்காலத்தில் தமிழின் சிறந்த பத்திரிக்கையாக பரிணமிக்கவிருக்கும் அகநாழிகையில் இக்கட்டுரை அச்சாக்கம் பெறுகிறது )
வியாழன், 27 மே, 2010
தற்கொலை அனுபவம்
சமிபத்தில் தற்கொலை செய்ய முயன்று தோற்ற நண்பனின் அனுபவம் சில விசயங்களை எனக்கு புரிய வைத்தது . மிக சரியான ஒரு நண்பகல் வேலையில் அந்த முடிவை யடுதான் அந்த தைரிய சாலி. அபாய கட்டத்தில் மருத்துவமனை கொண்டு சென்றால் அங்கு உள்ள நர்ஸ் முதல் டாக்டர் வரை அவனிடம் கேட்ட கேள்வி "நீங்கள் டிவி இல் வருபவர் தானே ! எப்படி இவளவு சரளமாக குசலம் விசாரிக்க முடியுமா ? என எனையே ஆச்சரிய பட வைத்தனர் . பினர் மிக அன்புடன் வரவேற்று பூலோக நரகத்தை காட்டினர். உடம்பு முழுக்க குழாய்கள் சொருக பெற்று கும்பி பக ட்ரீட்மென்ட் அளிக்க பெற்றது , நண்பனோ ! தனுஷ் இன் தம்பி போல் இருப்பான், அவன் உடம்பில் இருக்கும் ரத்தம் கொசு வின் ரத்தத்தைவிட கொஞ்சம் அதிகம் . ! அதனையும் உறிஞ்சி எடுத்தனர் பினர் ஏக பட்ட குழாய்கள் பொருத்திய பின் மயக்கம் தளிந்த நண்பன் கேட்ட கேள்வி இன்னும் அருமை,,,,,
ஏன் டாக்டர் என் உடம்புல என கரண்ட் எடுக்க போறிங்களா? எதுக்கு இதனை வயர்? ஆகவே நண்பர்களே , ஆதலால் சாதல் நன்று ! அனுபவித்த முறை இல் சொல்கிறான் நண்பன்.
செவ்வாய், 18 மே, 2010
வியாழன், 13 மே, 2010
மார்லன் பிராண்டோ – தி காட் ஃபாதர்
மார்லன் பிராண்டோவுக்கு அகாதமி அவார்ட் கிடைத்த பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலாவின் தி காட் ஃபாதர் 1972 ஆம் ஆண்டு வெளியானது. அமெரிக்க நிழல் உலக சாம்ராஜ்யத்தில் இத்தாலி குடும்பங்களின் ஆதிக்கத்தை இதில் நுட்பமாக பதிவு செய்திருந்தார் கப்போலா.
மார்லன் பிராண்டோவுக்கு இதில் கார்லியோன் குடும்பத்தின் தலைவர் கதாபாத்திரம். விட்டோ கார்லியோன். நண்பர்களுக்கும், நிழல் உலக தாதாக்களுக்கும் அவர் காட் ஃபாதர். கார்லியோன் குடும்பத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து மாஃபியா குடும்பங்கள் அமெரிக்காவின் நிழல் உலக வியாபாரத்தை கட்டுப்படுத்தின.
Mario Puzo 1961ல் எழுதிய தி காட் ஃபாதர் நாவலை தழுவி இந்தப் படத்தை எடுத்தார் கப்போலா. படத்துக்கான திரைக்கதையை மரியோவும், கப்போலாவும் இணைந்து எழுதினர். இத்தாலியிலுள்ள கார்லியோன் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் விட்டோ கார்லியோன். இவரது தந்தை உள்ளூர் தாதா ஒருவருடனான மோதலில் கொல்லப்படுகிறார். அவரது சவ அடக்கத்தின் போது அதே தாதாவின் ஆட்களால் அவரது மூத்த மகனும் சுட்டுக் கொல்லப்படுகிறான். அந்த குடும்பத்தில் எஞ்சியிருப்பது தாயும், ஒன்பது வயது விட்டோ கார்லியோனும் மட்டுமே.
ஒன்பது வயது விட்டோ கார்லியோனால் எந்தப் பிரச்சனையும் வராது, அவனை ஒன்றும் செய்யாதீர்கள் என தாதாவிடம் முறையிடுகிறாள் விட்டோவின் தாய். மறுக்கிறார் தாதா. தனது உயிரைக் கொடுத்து தாய் மகனை காப்பாற்றுகிறாள். சிலரது உதவியினால் அமெரிக்காவுக்கு வந்து சேர்கிறான் சிறுவனான விட்டோ கார்லியோன்.
விட்டோ கார்லியோனின் இளமைப் பருவமும், அவர் படிப்படியாக அமெரிக்காவின் நிழல் உலகை கட்டுப்படுத்தும் டானாக உயர்வதும் காட் ஃபாதர் இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது. இதில் இளவயது விட்டோ கார்லியோனாக நடித்திருந்தவர் ராபர்ட் டி நீரோ.
முதல் பாகத்தில் போதை மருந்து வியாபாரம் செய்ய வருகிறவன், விட்டோ கார்லியோனிடம் (மார்லன் பிராண்டோ) நிதி மற்றும் பாதுகாப்பு உதவிகளை கேட்கிறான். போதை மருந்து வியாபாரம் செய்வது தெரிந்தால் அரசாங்கத்தில் உள்ள தனது நண்பர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என மறுக்கிறார் பிராண்டோ. இதனைத் தொடர்ந்து பிராண்டோ கடைவீதியில் வைத்து சுடப்படுகிறார். மருத்துவமனையில் அவரை கொலை செய்ய நடக்கும் சதியை முறியடிக்கிறான், கடற்படையில் வீரனாக இருக்கும் அவரது இளைய மகன் மைக்கேல் (அல்பசினோ).
தொடர்ந்து நடக்கும் கேங் வாரில் தனது மூத்த மகனை இழக்கிறார் பிராண்டோ. உடல்நிலை காரணமாக தனது அதிகாரத்தை இளையமகன் மைக்கேலிடம் ஒப்படைக்கிறார். பிராண்டோவின் வயோதிகம் பேரக் குழந்தையுடன் கழிகிறது. வீட்டில் உள்ள உருளைக்கிழங்கு தோட்டத்தில் பேரனுடன் விளையாடும்போது அவரது உயிர் பிரிகிறது.
கேங்ஸ்டர் படங்களின் புதிய அத்தியாயம் தி காட் ஃபாதர் படத்திலிருந்து தொடங்குகிறது. கொலையை மட்டும் காட்சிப்படுத்தாமல் கொலைக்கான முகாந்திரம், மனநிலை, நிழல் உலக குடும்பங்களின் நிலைமை, அவர்களின் கொண்டாட்டங்கள், துக்கங்கள் என அனைத்தையும் நெருங்கி ஆராய்கிறது தி காட் ஃபாதர். விட்டோ கார்லியோன் கதாபாத்திரத்தை தனது அற்புதமான நடிப்பால் என்றும் அழியாத காவியமாக்கியிருந்தார் பிராண்டோ.
இந்தப் படத்தில் பிராண்டோவை நடிக்க வைப்பதற்காக ஏறக்குறைய ஒரு வருடம் காத்திருந்தார் கப்போலா. படத்தை தயாரித்த பாராமவுண்ட் ஸ்டுடியோ, பிராண்டோ கார்லியோன் கதாபாத்திரத்தில் நடிப்பதை ஏற்கவில்லை. அன்று ஹாலிவுட், ஸ்டுடியோக்களின் அதிகார கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஒரு திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தும் அதிகார மையமாக ஸ்டுடியோக்கள் விளங்கின. இயல்பிலேயே கலகக்காரரான பிராண்டோ இந்த அதிகாரத்துக்கு ஒருபோதும் கட்டுப்பட்டதில்லை. இதன் காரணமாக பிராண்டோவை தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அன்றைய எல்லா ஸ்டுடியோக்களும் மேற்கொண்டன.
ஒருவருட நீண்ட போராட்டத்துக்குப் பின் கப்போலாவின் கோரிக்கையை பாராமவுண்ட் ஏற்றது. அப்போதும் அது ஒரு நிபந்தனை விதித்தது. படப்பிடிப்புக்குமுன் பிராண்டோ மேக்கப் டெஸ்ட்டுக்கு ஒத்துழைக்க வேண்டும். அறிமுக நடிகர்களுக்குதான் படத்தில் நடிப்பதற்குமுன் மேக்கப் டெஸ்ட் வைப்பார்கள். பிராண்டோவை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நிபந்தனையை பாராமவுண்ட் விதித்தது. அது எதிர்பார்த்தது போலவே இந்த நிபந்தனைக்கு பிராண்டோ ஒத்துக் கொள்ளவில்லை. கப்போலாவின் வேண்டுகோளை ஏற்று இறுதியில் பிராண்டோ மேக்கப் டெஸ்டுக்கு ஒத்துக் கொண்டார்.
செவ்வாய், 11 மே, 2010
திங்கள், 3 மே, 2010
திங்கள், 19 ஏப்ரல், 2010
விண்ணைத்தாண்டி வருவாயா என் பார்வையில்
காதல் எல்லோருக்கும் ஒரு பாடம் நடத்தும் மோசமான ஆசிரியன் ,நான் கடந்த காதல் நினைவுகளை கோவா அனுபவங்களும் எம் மனதில் சிறு பிரளையத்தையும் உண்டாகிய படம் அல்ல பாடம் இது , தென் தமிழ்நாட்டில் பிறந்த எனக்கும் வடகோடியில் உள்ள அவளையும் சேர்த்து வாய்த்த அனுபவம் அது, தமிழையும் தமிழ் சித்தாந்தமும் உரிய தீவிரவாதியான எனக்கும் , இசையும் அன்பு சித்தாந்தமும்
உரிய கொள்கையும் ஒன்றாக இணைத்த விதியை எவ்வளவு பாராட்டினாலும் (திட்டினாலும் ) தகும். எனை மறந்த நாட்களை திரை இல் கண்டதும் சற்று கலங்கித்தான் போனான் என்னுள் உள்ள தமிழ் தீவிரவாதி, எனக்கு ஒரு ஆசை? என்றாவது ஒரு நாள் எங்கள் காதலை சொல்ல என் குழந்தைகளுக்கு இந்த பாடம் (படம்) உதவும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தேங்க்ஸ் lot my டியர் கெளதம்
Sin City [2005] - பாவ நகரம்..
ஒரு திரைப்படம் முடியும் நேரம், இன்னும் சில மணி நேரங்கள் இத்திரைப்படம் ஓடினால் நன்றாக இருக்குமே என்று தோன்றிய திரைப்படம் Sin City.. இப்போது எழுதி கொண்டிருக்கும் போது கூட, மீண்டும் பார்க்க தூண்டுகிறது.. அதே நேரத்தில் இந்த திரைப்படம் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமும் உள்ளது.. குறிப்பாக பெண்களுக்கு.. படம் முழுக்க வன்முறை மட்டுமே.. ஆனால் கவித்துமான வன்முறை.. ;)
*****
எல்லாருக்குமே படக்கதைகள் மீதான அலாதியான ஆர்வம் உண்டு.. இந்நாள்வரை நிறைய படக்கதைகளை படமாக எடுத்திருக்கிறார்கள்.. ஆனால் அவையெல்லாம் திரைப்படங்களாக மட்டுமே இருந்திருக்கிறது.. படக்கதைகளை படக்கதைகளாகவே திரைப்படத்தில் கொண்டுவந்தால்எப்படி இருக்கும்?? திரைப்படம் என்பது படக்கதை நகரும் ஊடகமாக மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்?? அதுதான் Sin City.
முழுக்க முழுக்க கருப்பு வெள்ளை காட்சிகளில் சில பகுதிகள் மட்டும் நிறங்கள் இருக்கும் (சில நேரம் பெண்ணின் உதட்டின் லிப்ஸ்டிக், சில நேரம் ரத்த துளிகள், காரின் நிறம், விளக்குகள், மழை பெய்யும் விதம், இப்படியாக).. காரை ஓட்டும் வேகம்.. ஆக்சன் காட்சிகள்.. படத்தை எடுத்த விதம், நகர்த்திய விதம், கதையாடல்.. என அப்படியே ஒரு படக்கதை புத்தகம் Sin City..
*****
Frank Miller-ன் Sin City படக்கதைகளை அவரே இயக்கி தந்திருக்கும் திரைப்படம்தான் SinCity.. படத்தின் special guest director-ஆக "Pulp Fiction" Quentin Tarantino.
படம் மூன்று கதையினூடே பயணிக்கிறது..
1. The Hard Goodbye - ஒரு முறை காதலிக்காக பழிவாங்கும் பெரிய உருவமுடைய ஒருவன் (Jason Douglas)..
2. The Big Fat Kill - அதிகாரத்தோடு (Benicio Del Toro) மோதும் பாலியல் தொழில் செய்யும் பெண்களின் ஒரு வாழ்க்கை போராட்டம்.. (Clive Owen)
3. That Yellow Bastard - ஒரு வயதான Police Officer (Bruce Wills) ஒரு தொடர் கொலைகாரனிடமிருந்து ஒரு சிறுபெண்ணை (Jesicca Alba)பாதுகாத்தல்..
*****
Sin City - ஒரு மிக வித்தியாசமான திரைப்படம் காண வேண்டுமானால் உடனே பாருங்க..
Léon [1994]
அவரின் பக்கத்துவீட்டில் இருக்கும் ஒருவரின் (போதை பொருள் இடை மனிதர்) குடும்பம் (அவரின் மனைவி, மூன்று குழந்தைகள்) வசிக்கிறது.. அவரின் பன்னிரண்டு வயது பெண் Mathilda (Natalie Portman)..
போதைப்பொருள் தலைவனை (வில்லன்) ஏமாற்ற முயன்றதற்காக, அந்த பக்கத்துக்கு வீடு குடும்ப தலைவனையும், அவன் குடும்பத்தையும் கொன்று குவிக்கிறான் வில்லன்.. அந்நேரம் வெளியே கடைக்கு சென்ற Mathilda திரும்பி வரும்போது, சம்பவங்களை புரிந்து பக்கத்து வீட்டின் கதவைத்தட்டி Leon இடம் சரணடைகிறாள்.. Leon வீட்டில் சிறு சிறு வேலைகள் (சமைத்தல், துணி துவைத்தல்) செய்து, பதிலாக தனக்கு கொலை செய்தலை கற்று தரவேண்டுமென்றும், தன் குடும்பத்தை கொன்றவர்களை பழிவாங்கவேண்டுமென்றும் கேட்கிறாள் Mathilda.. முதலில் மறுத்து, பின்பு தன் கொலைத்தொழில் கற்றுத் தருகிறான் Leon.. ஒரு கட்டத்தில் இந்த பன்னிரண்டு வயது பெண், Leon-ஐ காதலிப்பதாகவும் சொல்கிறாள்.. கதை இப்போது Leon, Mathilda, வில்லன் என்று பயணித்து, இவர்களின் வாழ்க்கை என்னவாகிறது என்பது மீதிக்கதை..
******
படம் உணர்வுகளால் கட்டப்பட்ட, விறுவிறுப்பான, கூடவே மெதுவாக நகர்ந்து செல்லும் ஒரு படம்.. Leon-ஆக Jean Reno-வும், பன்னிரண்டு வயது Mathilda-ஆக Natalie Portman-வும் நடிப்பில் கலக்கி இருக்கிறார்கள்.. வில்லன் உடல்மொழி மூலம் மிரட்டி இருக்கிறார்..
ஒரு மிக அருமையான திரைப்படத்திற்கு Léon உதாரணம்..
Inside Man [2006] - வங்கியை கொள்ளையடித்தல்..
சங்கிலி தொடர் தனியார் வங்கி நடத்தும் ஒரு பெரியமனிதரின், ஒரு முக்கியமான வங்கி கிளை ஒரு நாள் காலையில், Clive Owen - தலைமையிலான கொள்ளையர்களால் கைப்பற்றபடுகிறது.. உள்ளே ஏரளாமான பணமும், லாக்கர்களும் கூடவே வங்கி ஊழியர்களும் வங்கிக்கு வந்தவர்களுமாக கொஞ்சம் பணய கைதிகளாக.. நியூயார்க்கின் போலிஸ் படையும் துப்பறியும் நிபுணர்களும் அந்த வங்கியை சுற்றிவளைக்கின்றனர்.. கொள்ளையர்கள் சில நிபந்தனைகளை முன்வைக்கின்றனர்.. கால அவகாசமும் தருகின்றனர்.. நேரம் கடக்கிறது.. இரவு வந்து பின் அடுத்தநாள் காலையும் விடிகிறது.. திடீரென்று போலிஸ் உள்ளே நுழையும் போது கொள்ளையர்களாக யாரும் இல்லை.. உள்ளே இருப்பதெல்லாம் வங்கி ஊழியர்களும் வங்கிக்கு வந்தவர்களும்.. எந்த பணமும் லாக்கரும் சூறையாடபடவில்லை.. கொள்ளையர்கள் வங்கிக்கு வந்த மனிதர்களோடு ஊடுருவிட்டனர்.. ஆனாலும் கொள்ளை நடந்திருக்கிறது.. கொள்ளையர்களையும் பிடிக்க முடியவில்லை.. எது கொள்ளை போனது?? எப்படி?? இது விறுவிறுப்பான மீதிக்கதை..
******
எனக்கு மிகவும் பிடித்த திரைப்பட தளம் - கொள்ளையடித்தல் (Robbery).. எப்போதுமே புத்திசாலித்தனமான கொள்ளையடிக்கும் தளம் கொண்ட படங்கள் என் மனதை கொள்ளையடிக்கும்.. இந்த திரைப்படமும் நன்றாகவே இருந்தது.. தற்போது Inside Man 2 - தயாராகிக்கொண்டிருக்கிறது..
******
இந்த திரைப்படத்தின் முதலிலும் இறுதியிலும் பெயர்கள் போடப்படும்போது பின்னணியில் ஓடும் பாடல், A.R.ரஹ்மானின் - Dil Se படத்தின் Chaiyya..Chaiyaa பாடல்..
ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
3 Idiots [2009] - அறிவுக்கண்களை குருடாக்கும்
இந்தியக் கல்விமுறை..
தான் ஒரு சமூக பொறுப்புடைய நடிகன் என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கும் ஆமீர்கானுக்கு வணக்கம் சொல்லி இந்த படத்தை பற்றி பேச துவங்கலாம்.
.
Chetan Bhagat-ன் Five Point Someone படித்திருக்கீர்களா? அந்த புத்தகத்தின் மூலக்கதை மேல் அல்லது ஒரு வரி கதை மீது, கதை செய்து, திரைக்கதை செய்யப்பட்டிருக்கும் படம்.
.
தன் நண்பனை ஆமீரை தேடி, மாதவனும், ஷர்மானும், இன்னொரு படிப்ஸ் எதிரியும் மேற்கொள்ளும் road trip பயணமொன்றில், மாதவன் தன் நண்பனோடான பொறியியல் கல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்திக்கொள்ள துவங்குவதோடு நினைவுகள் விரிகிறது. முதல் நாள் கல்லூரியில் ஜூனியர்களை, சீனியர்களை ரேக்கிங் செய்துக்கொண்டிருக்கையில், ஆமீர் புத்திசாலிதனமாக சீனியரை எதிர்கொள்வதில் இருந்து, ஆமீர், மாதவன், ஷர்மான் நட்புக்காலம் துவங்குகிறது.
.
ஆமீர், மனப்பாடம் செய்து வாந்தியெடுக்கும் இந்திய கல்விமுறையை விரும்பாதவன், சரியான பயிற்சியும், ஆய்வுமுறைக்கு வழிவகுக்கும் நற்கல்வி முறையை விரும்பும் ஒருவன், அதேசமயம் புத்திசாலியும் கூட. மாதவனோ, ஒரு Wild Life Photographer ஆக விரும்பி, ஆனால் நடுத்தர குடும்ப, பெற்றோரின் ஆசைக்காக பொறியியல் படிக்கும் மாணவன். ஏழைக்குடும்பத்து ஷர்மானுக்கு, பொறியியல் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தை முன்னேற்றும் கடமை. இவர்களின் லூட்டிகள், ஆசிரியர்களூடான பிணக்குகள், Virus ஆசிரியரின் பெண்ணுடன் (கரீனா) அமீரின் காதல், இவர்களின் எதிர்காலம். இந்தக்கதையை நகைச்சுவையோடும், நெகிழ்ச்சியோடும் எடுத்திருக்கிறார்கள்.
.
சில காட்சிகள் மிகவும் அருமையாகவே இருந்ததன. பல காட்சிகள் கிளிஷேக்களாக இருந்ததன. மூன்று நண்பர்களும் பரிச்சைக்கு தாமதமாக வந்து பின், பரீட்சை கொஞ்சம் முடிந்த பின்னும், கொஞ்சம் நேரம் கேட்டு எழுதி, தேர்வுத்தாளை ஒப்படைக்கும் வேளையில், தேர்வுத்தாளை மறுக்கும் ஆசிரியரிடம், ஆமீர் செய்யும் உத்தி செம புத்திசாலித்தனம். அதே வேளையில் மின்சாரம் அற்ற வேளையில், leb-ல் battery, inverter வைத்து பிரசவம் பார்க்கும் காட்சியும் குழந்தைக்கு all is well சொல்லி மூச்சு வரவைப்பதும் ரொம்ப பழைய காட்சிகள்.
.
புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கும், தொழிற்பயிற்சிக்கும் ஊக்கம் தராமல் மனப்பாடம் செய்து வாந்தியெடுக்கும் முன்னுரிமை தரும் இந்தியக்கல்விமுறை மீதான விமர்சனத்தையும், பெற்றோர் தம் கனவுகளை ஏற்றி பொதிமூட்டை கழுதைகளாய் குழந்தைகளை மாற்றுவதையும் முன்வைக்கிறது இத்திரைப்படம். ஆனால் இந்த message-காக இரண்டரைமணி நேரம் நம்மை உட்காரசொல்வது படத்தின் குறை. மேலும் ஆமீர், மாதவனை கல்லூரி மாணவர்களாக பார்க்க கொஞ்சம் உறுத்தவே செய்கிறது.
.
3 Idiots- படம் பார்க்க விரும்பினால் பாருங்கள். பல இடங்களில் சிரிப்பு நிச்சயம். பல இடங்களில் கொட்டாவி நிச்சயம்.
படம் பார்க்க விருப்பமில்லையென்றால், Chetan Bhagat-ன் Five Point Someone வாங்கி படியுங்கள். மகிழ்ச்சி நிச்சயம்.
American Gangster
Heroin Dealer: How did you get in to states?
Frank: You no need to worry about that..
HD: Whom do you work for there?
Frank: You no need to worry about that..
HD: Who you really?
Frank: Frank Lucas, as represent in passport
HD: I mean whom you represent?
Frank: Me
HD: you think you are going to take 100 kilos of heroin to US and you don’t work for anyone and someone is going to allow that
Frank: thats right
இப்படிப் போகும் உரையாடல்…..
வியட்நாமிற்கும் அமெரிக்கவிற்கும் இடையே நடந்துள்ள போரை கதையின் முக்கிய களமாக பயன்படுத்திஉள்ளனர். அங்கிருந்து வாங்கிய ஹெராயின் பவுடர்களை, போரில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் சடலங்களை ஏற்ற வரும் விமானத்தின் மூலம் யாருக்கும் சந்தேகம் வராத முறையில் கடத்தி, அமெரிக்கா வந்தடைந்தவுடன், விமான நிலையத்தில் கழிவுகளை அகற்ற வரும் container மூலம் அதை தன்னுடைய இருப்பிடத்திற்கு கொண்டுவருவார். பின்னர் பவுடர்களை சின்ன சின்ன பாக்கெட்டில் போட்டு Blue Magic என்று பெயரிட்டு சந்தைபடுத்தப்படும். தனி ஒரு நபராக எல்லா வேலைகளையும் செய்வதால் போலீசில் இவருடைய புகைப்படம் கூட இருக்காது. இந்த ஹெராயின் எங்கிருந்து வருகிறது யார் விற்கிறார்கள் என்று கண்டறியும் பொறுப்பு டிடெக்டிவ் Richie Robertயிடம் வருகிறது. 50க்கும் மேலான போதைப்பொருள் விற்ப்பவர்களின் புகைப்படங்களை வைத்து விசாரணையை தொடங்கும் Richie, பின்னர் இந்த படத்தில் இல்லாத யாரோ ஒருவன் தான் இதற்க்கு பின் புலமாக இயங்கிக்கொண்டிருக்கிறான் என்று சந்தேகக்கண்கொண்டு கடைசியாக Frankஐ கண்டுபிடிப்பார். Frank உடைய காதலி, குடும்பம் மற்றும் Richie Robert உடைய மனைவி குழந்தை என்று கதை அவ்வப்போது அவர்களையும் சுற்றுவதால் ஏதோ படம் பார்க்கிறோம் என்கின்ற உணர்வையும் மீறி நம்மை சுற்றி நடக்கின்ற ஒரு சம்பவத்தை கவனிப்பது போல தோன்றுகிறது.
வியாழன், 15 ஏப்ரல், 2010
அங்காடி தெரு ஏன் பார்வையில்
சமிபத்தில் வசந்த பாலனின் அங்காடி தெரு திரைப்படம் காண நேர்த்தது. வெகுஜன ஜன மக்களின் வியாபார நேரத்தில் கசங்கும் இதய சுவடுகளின் வலியை அழகாக எடுத்துரைத்தனர் இத் திரைபடத்தில் .......
என் உணவக அனுபவத்தில் நான் உணர்த்த வலிகளையும் விழிகளின் ஓரம் கண்ணீர் வளியும் பாலை நாட்களின் நினைவுகள் எனை படத்துடன் ஒன்ற வைத்தது . இனிமேல் துணி கடையில் உடை எடுக்கும் போது முகர்த்து பாருங்கள் , ! அதை விற்கும் ஏழை சேல்ஸ் கேர்ள் துயர வாசனை அதில் இருக்கலாம் ?